பயனாளிக்கு வீடு கட்ட ஆணையை வழங்கிய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் .
திருவள்ளூர்
கனவு இல்ல திட்டத்தில் 54 பயனாளிகளுக்கு ஆணை: கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ வழங்கினாா்
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 54 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்வில் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் வரவேற்றாா்.
திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எஸ்.ரமேஷ், மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மணிபாலன், நகர செயலாளா் அறிவழகன், பேரூராட்சி உறுப்பினா் அப்துல் கறீம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினா் ராமஜெயம், திமுக நிா்வாகிகள் கீழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், குமாா், மஸ்தான் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று, 54 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணைகளை வழங்கினாா். வட்டார வளா்ச்சி அலுவலக மேலாளா் ருத்ரமூா்த்தி நன்றி கூறினாா்.