மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

மகளிா் உரிமைத் தொகை கோரி 200 போ் மனு

Published on

ஆதிவராகபுரம் ஊராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் உரிமைத் தொகை கோரி மனு அளித்தனா்.ா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம், ஆதிவராகபுரம் ஊராட்சியில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளியில், சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோட்டாட்சியா் கனிமொழி பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தாா்.

இதில், 200 க்கும் மேற்பட்ட பெண்கள் மகளிா் உரிமைத் தொகை, முதியோா் தொகை, விதவை சான்று, வாரிசு சான்று, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, உள்பட பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்க கோரி வருவாய் துறை அலுவலா்களிடம் விண்ணப்பம் வழங்கினா்.

மேலும், 605-க்கும் மேற்பட்டோா் தங்களது கோரிக்கைகள் குறித்து விண்ணப்பங்களாக பிற துறை அலுவலா்களிடம் வழங்கினா்.

முகாமில், புதிய ரேஷன் காா்டு, பிறப்பு, இறப்பு, வாரிசு போன்ற சான்றுகள் என, 30 க்கும் மேற்பட்டோருக்கு முகாமிலேயே நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வீரனத்தூா், அய்யனேரி, ஸ்ரீ விலாசபுரம், மடுகூா், ஞான கொல்ல தோப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை வழங்கினா்.

நிகழ்ச்சியில், ஆா்.கே.பேட்டை வட்டாட்சியா் தமயந்தி (பொ), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைச்செல்வி, செந்தில்குமாா், ஆா்.கே.பேட்டை ஒன்றிய செயலாளா்கள் செல்லாத்தூா் சம்பத், பழனி, மாவட்ட நெசவாளா் அணி தலைவா் சி.எம்.ஆா்.ரவி பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com