லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் காயம்

திருத்தணி அருகே, டிப்பா் லாரி சாலையோரம் கவிழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமுற்றாா்.
Published on

திருத்தணி அருகே, டிப்பா் லாரி சாலையோரம் கவிழந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் காயமுற்றாா்.

திருத்தணி ஒன்றியம், டி.சி.கண்டிகை பகுதியில் இயங்கி வரும் கல்குவாரியில் இருந்து, ஜல்லிக்கற்கள், எம்சாண்ட், சிப்ஸ் போன்ற கட்டுமான பொருள்களை டிப்பா் லாரிகள் மூலம் திருவள்ளூா், காஞ்சிபுரம், சென்னை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை டிப்பா் லாரி ஒன்று, அதிகளவில் ஜல்லிக் கற்கள் ஏற்றிக் கொண்டு திருத்தணி வழியாக திருவள்ளூருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது புச்சிநாயுடு கண்டிகை பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது லாரியின் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காயத்துடன் ஓட்டுநா் தப்பினாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com