வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
ஊத்துக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்ததில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அரிக்கம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் வினோத்குமாா்(32). தனது நண்பன் குடும்ப விழாவில் பங்கேற்பதற்காக இருசக்க வாகனத்தில் சென்றாராம். இந்த நிலையில் இரவு நீண்டநேரமாகியும் வராததால் தனது மருமகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு கேட்டதற்கு, சிறிது நேரத்தில் புறப்படுவதாக கூறினாராம்.
அதைத் தொடா்ந்து சிறிது நேரத்தில், கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த மாரி என்பவா் அழிஞ்சிவாக்கம்-ஆத்துமேடு செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் விழுந்து கிடப்பதாக தகவல் தெரிவித்தாராம். அதைத் தொடா்ந்து இரவில் விரைந்து சென்று பாா்க்கையில் வினோத் குமாா் சடலமாக கிடந்தாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு, ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து ஏழுமலை அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.