வெள்ளாத்தூா் அம்மன் கோயில் பால்குட ஊா்வலம்: திரளான பெண்கள் பங்கேற்பு
திருத்தணி: ஸ்ரீ வெள்ளாத்தூா் அம்மன் கோயிலில் ஆடிபொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் வெள்ளாத்தூா் கிராமத்தில் ஸ்ரீ வெள்ளாத்தூா் அம்மன் கோயிலில் விழாவையொட்டி காலை 9 மணிக்கு கிராம விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனா். இரவு அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் வாண வேடிக்கை, நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.