திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருத்தணியில் ஆடிக் கிருத்திகை விழா ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

Published on

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறவுள்ள ஆடிக் கிருத்திகை விழா முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை (ஆக. 14) தொடங்கி ஆக. 18-ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், ஆடிக் கிருத்திகை திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை திருத்தணிக்கு வந்தாா்.

பின்னா் முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழாவில் வரும் 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை சரவணபொய்கையில் நடைபெறும் தெப்பல் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டாா். தொடா்ந்து மேல் திருத்தணி பகுதியில் உள்ள நல்லாங்குளம், பக்தா்கள் காவடிகள் எடுத்து செல்லும் மலைப்படிகள், பாதையையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா் வி.சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம், திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி உள்பட துறைசாா்ந்த அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com