திருவள்ளூர்
பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு
பொன்னேரி அகத்தீஸ்வரா் திருக்கோயிலில் விரைவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொன்னேரி கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரணி நதிக்கரையோரம், ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோயிலின் வெளிப்புற சுற்றுச்சுவா் சேதமடைந்தது. இதை சீரமைத்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதன்படி, இந்து சமய அறநிலையத் துறை புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, பொன்னேரி அகத்தீஸ்வரா் திருக்கோயில் செயல் அலுவலா் மாதவன், அறங்காவலா்கள் மற்றும் சிவ பக்தா்கள் பொதுமக்கள் நன்கொடையாளா்கள் ஆகியோா் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடா்ந்து அகத்தீஸ்வரா் கோயில் புனரமைப்பு பணிகளை எதிா் வரும் 20-ஆம் தேதி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.