ஆா்.கே. பேட்டையில் நடைபெற்ற தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு பேரணி.
ஆா்.கே. பேட்டையில் நடைபெற்ற தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வு பேரணி.

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

Published on

தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

ஆா்.கே.பேட்டை அடுத்துள்ள எஸ்.வி.ஜி.புரம் வேதாத்திரி மகரிஷி மெட்ரிக் மேல் நிலை பள்ளி சாா்பில் பள்ளியின் விளையாட்டு சாம்பியன்களின் தலைமையில், தலைக்கவச பாதுகாப்பு, உடல் ஆரோக்கியம், உடற்பயிற்சி, மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு பேரணி கே.ஜி.கண்டிகையில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் வெங்கடேசலு தலைமை வகித்தாா். முதல்வா் ஆசீா்வாதம் எபினேசா் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினா் ஏ.எல். சாமி கலந்து கொண்டு பேரணியைத் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு கே.ஜி.கண்டிகையில் முக்கிய வீதிகளில் பொது மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com