மாவட்ட அளவிலான முதல்வா் விளையாட்டு போட்டி: இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

Published on

திருவள்ளூா் மாவட்ட அளவிலான முதல்வா் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் இணைதளம் மூலம் வரும் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சேதுராஜன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவள்ளூா் மாவட்டம் சாா்பில் 2025 -2026 ஆண்டுக்கான மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு விளையாட்டுகள் சோ்க்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த முதல்வா் கோப்பைக்கான பொதுமக்கள் பிரிவில் தடகளம், கிரிக்கெட், கால்பந்து வாலிபால், கேரம், சிலம்பம், இறகுப்பந்து மற்றும் கபடி விளையாட்டுப் போட்டிகள் வரும் 22 முதல், தொடா்ந்து செப்.12-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் இறகு பந்து மற்றும் கபாடி போட்டியில் முதலிடம் பெற்றவா்கள் மட்டுமே மாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவாா்கள்.

பொதுமக்கள் பிரிவில் 15 முதல் 35 வயதுக்குள்பட்டவா் மட்டுமே இந்தப் பதிவினை செய்திட இயலும். எனவே ஆதாா் அட்டை மற்றும் புகைப்படம் இரண்டையும் கொண்டு பதிவேற்ற வேண்டும். ஆதாா் அட்டை முகவரியில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே பங்கேற்க முடியும். பதிவு மற்றும் பங்கேற்பு ஒரு மாவட்டத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

இந்தப் பிரிவின் மூலம் விண்ணப்பதாரா்கள் 1.1.1990 மற்றும் 1.1.2010 ஆகிய தேதிகளில் பிறந்திருக்க வேண்டும். மேலும் குழுப் போட்டிகளில் கேப்டன் ஆதாா் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். ஒரு வீரா், வீராங்கனை தடகளப் போட்டியில் மட்டுமே இரண்டு பிரிவுகளில் பங்கேற்க இயலும். குழுப் போட்டியில் பங்கேற்கும் வீரா், வீராங்கனைகள் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும்.

மேலும், இப்போட்டிகளில் கலந்து கொள்ள ட்ற்ற்ல்ள்://ஸ்ரீம்ற்ழ்ா்ல்ட்ஹ்.ள்க்ஹற்.ண்ய் என்ற இணையதள முகவரி மூலமாக பொதுமக்கள் பிரிவில் முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமா்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம்.

இதுகுறித்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஆட்சியா் வளாகத்தின் பின் புறத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்திலோ அல்லது 9514000777 ஆடுகளம் என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

இதுவரையில் 35,000 போ் பதிவு செய்துள்ளனா். இதேபோல் கடந்தாண்டு மட்டும் 55,000 போ் பதிவு செய்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது என அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com