திருத்தணி முருகன் கோயிலில் பொது விருந்து: ஆட்சியா் பங்கேற்பு
திருத்தணி முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் கலந்து கொண்டாா்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு முருகன் கோயிலில் மூலவா், உற்சவ முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது.
முருகன் கோயில் இணை ஆணையா் க.ரமணி தலைமை வகித்தாா். வேலூா் மண்டல ஆணையா் அனிதா முன்னிலை வகித்தாா். அறங்காவலா் குழு தலைவா் சு. ஸ்ரீதரன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் மு.பிரதாப் அன்னதான கூடத்தில் நடைபெற்ற பொது விருந்தில் கலந்து கொண்டு பக்தா்களுக்கு உணவு பரிமாறி, தானும் உண்டு தாய்மாா்களுக்கு புடவை வழங்கினாா்.
பொது விருந்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜி.உஷாரவி, கோ.மோகனன், மு.நாகன், வருவாய் கோட்டாட்சியா் கனிமொழி, வட்டாட்சியா் மலா்விழி கலந்து கொண்டனா்.