ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் ரூ.1.50 லட்சம், பொருள்கள் திருட்டு

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் வீட்டில் ரூ. 1.50 ரொக்கம், பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே சேலை கிராம சாலையில் உள்ள என்ஜிஓ காலனியில் வசிப்பவா் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளா் சித்திராஜ் (66). இந்த நிலையில் சித்திராஜும், அவரது மனைவியும் கடந்த 2 நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றனராம்.

பின்னா், சனிக்கிழமை வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வென்டிலேட்டா் உடைக்கப்பட்டு, பின் வாசல் கதவு திறந்திருந்தது தெரியவந்தது.

உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ. 1.50 லட்சம் ரொக்கம், வெள்ளி, பித்தளை பொருள்கள், எரிவாயு உருளைகளை திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து திருவள்ளூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com