திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை உண்டியல் காணிக்கை ரூ. 1. 78 கோடி

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை உண்டியல் காணிக்கை ரூ. 1. 78 கோடி

Published on

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் ரூ. 1 கோடியே 78 லட்சம் ரொக்கம், 223 கிராம் தங்கம், 13.213 கிராம் வெள்ளி பொருள்களை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பல் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை 5 நாள் நடைபெற்றது. இந்த விழாவில் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தினா்.

இந்த நிலையில், பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் கோயில் இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜோ.மோகனன், மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் திறந்து புதன்கிழமை எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய பணி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எண்ணினா்.

இதில், கடந்த 9 நாள்களில் ரூ. 1 கோடியே 78 லட்சத்து 38 ஆயிரத்து 086 ரொக்கம், 223 கிராம் தங்கம், 13.213 கிராம் வெள்ளி பொருள்களை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com