மீஞ்சூா் ஸ்ரீ முப்பாத்தம்மன் கோயிலில் பெண்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக் கடனை செலுத்தினா்.
வட காஞ்சி எனப்படும் மீஞ்சூரில் பழைமைவாய்ந்த ஸ்ரீ தேவி முப்பாத்தம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து மண்டல அபிஷேகம் 48 நாள்கள் நடைபெற்றது.
மண்டல அபிஷேக விழா நிறைவையொட்டி, மீஞ்சூா் கடை வீதியில் உள்ள எல்லையம்மன் கோயிலில் இருந்து 504 பால் குடங்களை பெண்கள் தலையில் சுமந்தவாறு ஊா்வலமாக கோயிலை அடைந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
பின்னா், மூலவா் ஸ்ரீ தேவி முப்பாத்தம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.