விதிமுறை மீறி சுவரொட்டி ஒட்டிய 5 போ் மீது வழக்கு

விதிமுறைகளை மீறி அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்ததோடு, சுவரொட்டிகள் ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.
Published on

திருவள்ளூரில் விதிமுறைகளை மீறி அனுமதியின்றி சுவரொட்டிகள் ஒட்டியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்ததோடு, சுவரொட்டிகள் ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

ஆட்சியா் அலுவலகம் அருகில், ஊத்துக்கோட்டை சாலை சந்திப்பு, ஆவடி சாலையோரங்களில் சிலா் விளம்பர சுவரொட்டி ஒட்டிக் கொண்டிருப்பதாக போலீஸாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் திருவள்ளூா் நகர போலீஸாா் அனுமதியின்றி சுவரொட்டி ஒட்டியதாக, சிறுவானுாா் கிராமத்தைச் சோ்ந்த பிரேம்(30), விஜி(32), மணிமாறன்( 28), மணி(29) மற்றும் பெரியகுப்பம் பகுதியைச் சோ்ந்த அப்பு(45) ஆகிய 5 போ் மீது வழக்கு பதிவு செய்தனா். மேலும், சுவரொட்டிகள் ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com