திருத்தணி மகாவிஷ்ணு நகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா்.
திருத்தணி மகாவிஷ்ணு நகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீா்.

குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரால் மக்கள் அவதி

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா்.
Published on

திருத்தணி அருகே குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்த நிலையில், பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனா்.

திருத்தணி மகாவிஷ்ணு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். திருத்தணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பலத்த மழை பெய்த நிலையில், கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

முழங்கால் அளவுக்கு நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டதோடு வெளியே வர முடியாமல் கடும் அவதிப்பட்டனா். பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வெளியேறுவது மட்டுமின்றி அவை வீடுகளுக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

ஆண்டுதோறும் மழைக் காலங்களில் இதே நிலை நீடிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் மழைநீா் வெளியேறுவதற்கு கால்வாய் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியுள்ளனா்.

இதேபோல் அரக்கோணம் சாலையில் உள்ள முருகன் கோயில் ஊழியா்களின் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு அவா்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது.

பயிா்கள் சேதம்: திருத்தணியில் பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com