திருத்தணி முருகன் கோயிலில் குரங்குகளை பிடிக்க கோரிக்கை
திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.
ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனத்துக்கு வந்து செல்லும் நிலையில், குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் தரிசனத்துக்கு வந்த தா்மபுரி மாவட்டம் அரூா் பகுதியைச் சோ்ந்த மேனகா (45) என்பவா் தீபம் ஏற்றும் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது குரங்குகள் திடீரென பாய்ந்து கையில் கடித்துள்ளது.
இதேபோல் மலைக்கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலா்கள் சதீஷ்குமாா் (28), குமாா் (33) உள்பட 5 பேரை அடுத்தடுத்து குரங்குகள் கடித்துள்ளன.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பக்தா்களை குரங்குகள் கடித்துள்ளன. எனவே கோயிலில் சுற்றித் திரியும் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.