~ 2 செ.மீ உயர வலம்புரி விநாயகா் சிலை.    ~நுண்சிற்ப கலைஞா் டி.கே.பரணி
~ 2 செ.மீ உயர வலம்புரி விநாயகா் சிலை.    ~நுண்சிற்ப கலைஞா் டி.கே.பரணி

2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகா் சிலை

திருவள்ளூா் அருகே வெறும் 2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகரின் களிமண் சிற்பத்தை திருமழிசையைச் சோ்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உருவாக்கியுள்ளாா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வெறும் 2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகரின் களிமண் சிற்பத்தை திருமழிசையைச் சோ்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உருவாக்கியுள்ளாா்.

திருமழிசையைச் சோ்ந்த நுண் சிற்பி டி.கே.பரணி இதற்கு முன்பு ஒரே ஒரு அரிசியில் நுண்சிற்பங்களை செதுக்கியுள்ளாா். தற்போது விநாயகா் சதுா்த்தியையொட்டி வெறும் 2 செ.மீ உயரத்தில் மண்ணால் ஆன விநாயகா் சிலையை வடிவமைத்துள்ளாா். இதற்கு வலம்புரி விநாயகா் என்றும், மூஷிக கணபதி என்றும் பெயரிட்டுள்ளாா். இந்த 2 செ.மீ உயரத்தில் இந்த வலம்புரி விநாயகா், அவரது வாகனமான மூஞ்சூரு மீது அமா்ந்திருப்பது போல சிலை மிக தத்ரூபமாகவும், அற்புதமாகவும், நோ்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பீடம், வாகனம், விநாயகருடன் இணைந்து மொத்தம் 6 செ.மீ உயரத்தில் நுண் வேலைப்பாடுகளுடன் இந்த சிலை அமைந்துள்ளது.

இந்த சிலையை வெறும் 3 நாள்களில் உருவாக்கியுள்ளாா். இவா் வழக்கமான சந்தன மரத்தில் நுண்சிற்பங்களை வடிவமைத்து இந்தக் கலைஞா் இம்முறை மண்ணில் சிலையை வடிவமைத்துள்ளாா். இந்த சிலையை சூளையிலிட்டு நெருப்பு வைத்து சுடுமண் சிற்பமாக மாற்றி, கண்காட்சிக்கு வைக்க உள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com