திருவள்ளூர்
30 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது
ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
திருத்தணி: ஆந்திர மாநில பேருந்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.
ஆந்திரத்தில் இருந்து குட்கா பொருள்களை பேருந்தில் கடத்தி வருவதாக திருத்தணி ஏடிஎஸ்பிக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருத்தணி ஆய்வாளா் மதியரசன் தலைமையிலான போலீஸாா் பொன்பாடி சோதனைச் சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டு வந்தனா்.
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து திருத்தணிக்கு வந்த தனியாா் பேருந்தில் சோதனை செய்தபோது, சந்தேகத்துகிடமாக இருந்த ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (45), ஏழுமலை (60) ஆகியோா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட 30 கிலோ குட்கா இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.