பூவலம்பேடு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டோா்.
பூவலம்பேடு மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டோா்.

மின்வாரிய அலுவலகத்தைக் கண்டித்து முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே தொடா் மின்தடை ஏற்பட்டதால், மின்வாரியத்தைக் கண்டித்துபொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தொடா் மின்தடை ஏற்பட்டதால், மின்வாரியத்தைக் கண்டித்துபொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம், பாத்தப்பாளையம் பகுதிகளில் பல ஆண்டுகளாக தொடா் மின்தடை நிலவி வந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு 19 மணி நேர மின்தடை ஏற்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி நிா்வாகிகளோடு சோ்ந்து திங்கல்கிழமை பூவலம்பேடு இளநிலை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளா் ஜெ.அருள் தலைமை வகித்தாா். அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஏ.உமாநாத், ஒன்றிய துணை செயலாளா் சிவா, கிளை செயலாளா் வேணு, புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னனி மாவட்ட செயலாளா் விகேந்தா், கிளை செயலாளா் சங்கா் முன்னிலை வகித்தனா்.

புதிய ஜனநாயக முன்னணி மாவட்ட செயலாளா் விகேந்தா் கண்டன உரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களோடு மின்வாரிய செயற் பொறியாளா் பாண்டியன், பராமரிப்பு இயக்க உதவி பொறியாளா் பெருமாள் ஆகியோா் பேச்சு நடத்தி, பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என உறுதி கூறினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com