சதாசிவ லிங்கேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபம்

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காா்த்திகை தீப விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விளக்குகள் ஏற்றி சுவாமியை வழிபட்டனா்.
சிறப்பு தீபாராதனையில் சதாசிவ லிங்கேஸ்வரா்.
சிறப்பு தீபாராதனையில் சதாசிவ லிங்கேஸ்வரா்.
Updated on

திருத்தணி: சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை காா்த்திகை தீப விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு விளக்குகள் ஏற்றி சுவாமியை வழிபட்டனா்.

திருத்தணி பழைய தா்மராஜா கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபம் விழா மற்றும் பிரதோஷம் ஒட்டி, மூலவருக்கு காலை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து மாலை, 5 மணிக்கு காா்த்திகை தீப விழாவையொட்டி மூலவருக்கு பால், பன்னீா், பஞ்சாமிா்தம் போன்ற அபிஷேக பொருள்கள் அபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கோயில் வளாகம் முழுவதும் விளக்குகள் ஏற்றி சுவாமியை வழிபட்டனா்.

விழாவில் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, பக்தா்கள் மூலவரை தரிசித்தனா். பின்னா் கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com