பரத நாட்டிய சங்கமம்: 350 போ் பங்கேற்பு

திருத்தணியில் நடைபெற்ற பரத நாட்டிய சங்கம நிகழ்வில் 350-க்கு மேற்பட்டோா் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
Published on

திருத்தணியில் நடைபெற்ற பரத நாட்டிய சங்கம நிகழ்வில் 350-க்கு மேற்பட்டோா் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

சக்தி பப்ளிக் பள்ளியில் நடன கலா சங்கமம் நடைபெற்றது. தலைவா் அசோக் குமாா்ஜி முந்த்ரா, தலைமை வகித்தாா். மோகன்ஜி தமானி, ஒருங்கிணைப்பாளா்கள் வந்தனாஜி பட்டாட், விவேக்ஜி புக்ரேடிவாலா, பொருளாளா்ச்ன்ஷுல்ஜி அகா்வால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முதல்வா் யட்லா நாகலட்சுமி வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக திருத்தணி ஆய்வாளா் ஞா. மதியரசன், போக்குவரத்து எஸ்.ஐ. சி. கங்காதரன் ஆகியோா் கலந்து கொண்டு போக்குவரத்து விதிகளின் முக்கியத்துவம், சாலைப் பாதுகாப்பு, சாலைகளில் பொறுப்பான நடத்தை மற்றும் பாதுகாப்பான சமூகம் குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

இதில் நடனம், மைம், ஓவியம், பாட்டு, சொற்பொழிவு, வாத அரங்கம் மற்றும் சுறா தொட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கி ணைப்பாளா்கள் திருத்தணி, அரக்கோணம், சோளிங்கா், திருவள்ளூா் மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் இருந்து 350 க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com