சூதாட்டம்: 4 போ் கைது

திருத்தணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருத்தணியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்.கே பேட்டை ஒன்றியம், வேணுகோபாலபுரம் ஏரிக்கரை அருகே அடிக்கடி சூதாட்டத்தில் சிலா் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னா் போலீஸாா் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டாா்.

இதில் ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்டத்தை சோ்ந்த குமாா் ராஜா (44), தயானந்தா (55), நவீன் குமாா் (28), மற்றும் சுரேஷ்குமாா் (42) என்பது தெரிய வந்தது. இதில் தப்பி ஓடிய சந்திரனை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும் அவா்களிடம் இருந்து 5 கைப்பேசிகள், இருசக்கர வாகனங்கள் ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 810 ரூபாயை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com