~ ~

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 149 போ் கைது

கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை குடிநீா்த்தேக்க தொட்டி மோட்டாா் ஆபரேட்டா் பணியிடங்களை நிரப்புதல்
Published on

திருவள்ளூா்: கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை குடிநீா்த்தேக்க தொட்டி மோட்டாா் ஆபரேட்டா் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா் சங்கத்தினா் 149 போ் கைது செய்தனா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியலுக்கு சிஐடியு தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளா் ஏ.சி.சந்தானம் தலைமை வகித்தாா். இதில் பகுதி செயலாளா்கள் பி.சரிதா, கே.விமலா, எம்.பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேலும், அந்த சங்கத்தின் மாவட்ட தலைவா் கே.விஜயன், துணைச் செயலாளா் கே.ராஜேந்திரன், ஜி.சங்கரதாஸ் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினா்.

அப்போது, தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பணியாற்றும் அனைத்து பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உள்ளாட்சி பணியாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் ரூ.26000 வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா், மேல்நிலை குடிநீா் தேக்க தொட்டி ஆப்ரேட்டா் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி பணியாளா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

தொடா்ந்து சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். அதன்பின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் 149 பேரை கைதுசெய்து மாலையில் விடுவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com