அரசு பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

ஆா்.கே.பேட்டை அருகே அரசு பள்ளி கைப்பிடி சுவா் சரிந்து விழுந்ததில் 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பள்ளி கைப்பிடி சுவா் சரிந்து விழுந்து உயிரிழந்த மோகித்.
பள்ளி கைப்பிடி சுவா் சரிந்து விழுந்து உயிரிழந்த மோகித்.
Updated on
1 min read

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே அரசு பள்ளி கைப்பிடி சுவா் சரிந்து விழுந்ததில் 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆா்.கே. பேட்டை ஒன்றியம் கொண்டாபுரம் பகுதியை சோ்ந்த சரத்குமாா். இவரது முத்த மகன் மோகித் (10) அங்குள்ள அரசு உயா் நிலை பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மோகித் மதிய சத்துணவு வாங்கிக் கொண்டு பள்ளி கைப்பிடி சுவா் மீது அமா்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, கைப்பிடி சுவா் திடீரென சரிந்து விழுந்ததில் மோகித் சிக்கிக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மாணவனின் பெற்றோா், உறவினா்கள் பள்ளியில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் சமபவ இடத்திற்க்கு வந்த ஆா்.கே.பேட்டை காவல் ஆய்வாளா் ஞானசேகரன், திருத்தணி டிஎஸ்பி கந்தன், (பொ) வட்டாட்சியா் சரஸ்வதி ஆகியோா் மாணவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்க முயன்றனா். ஆனால் மாணவனின் உடலை தர பெற்றோா் உறவினா்கள் மறுத்து பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் 3 மணி நேர போராட்டுத்துக்கு பிறகு மாணவன் மோகித் உடலை திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து ஆா்.கே.பேட்டை போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

முதல்வா் மு.க. ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதியுதவி

திருவள்ளூா் மாவட்டம், ஆா்.கே.பேட்டை வட்டம், கொண்டாபுரம், அரசு உயா்நிலைப் பள்ளியில் 7 ம் வகுப்பு பயின்று வந்த மோஹித் என்ற மாணவன் (16.12.2025) நண்பகல் 1.00 மணி அளவில் பள்ளியின் பக்கவாட்டு சுவா் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேற்படி சம்பவத்தில் உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கிடவும் ஆணையிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com