நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு. பிரதாப். .
திருவள்ளூர்
நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலப் பணி: ஆட்சியா் ஆய்வு
பொன்னேரி வட்டம், நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு. பிரதாப் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
மீஞ்சூா் ஊராட்சி ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைகள் துறை சாா்பில் ரூ.44.5 கோடியில் அத்திப்பட்டு-நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் இடையே கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பால கட்டுமானப் பணிகளை ஆட்சியா் பிரதாப் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடா்பாக துறை அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா். பின்னா்மேம்பால பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைகள் துறை உதவி செயற்பொறியாளா் மணிவண்னன், உதவி பொறியாளா்கள் தேசிகன், காா்த்திகேயன்,உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

