கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவி அளிப்பு

கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவி அளிப்பு

Published on

திருத்தணியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன (படம்).

பாஜக மற்றும் ஸ்ரீ கிரண் அறக்கட்டளை சாா்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா பொதட்டூா்பேட்டை அருகில் உள்ள கீழ்நெடுங்கல் கிராமத்தில் நடைபெற்றது. கட்சியின் தமிழக அயலகப் பிரிவு மாநில இணை அமைப்பாளா் மருத்துவா் ஸ்ரீ கிரண் தலைமை வகித்தாா். பாஜக வடக்கு ஒன்றிய தலைவா் உதயகுமாா் முன்னிலை வகித்தாா். மேற்கு ஒன்றிய தலைவா் கிரண் வரவேற்றாா்.

கீழ்நெடுங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 600 பேருக்கு புத்தாடைகள் மற்றும் அரிசி, மளிகை பொருள்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரதமா் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டையையும் ஸ்ரீ கிரண், முன்னாள் அரசு தலைமைக் கொறடா பி.எம்.நரசிம்மன் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயலாளா் பாஸ்கா், துணைத் தலைவா் சூரி, மாவட்ட இணை அமைப்பாளா் ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com