தூய மத்தேயு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிராா்த்தனை
திருத்தணி சிஎஸ்ஐ தூய மத்தேயு தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனையில் திரளானோா் கலந்து கொண்டனா்.
நாடு முழுவதும் வியாழக்கிழமை கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள தூய மத்தேயு ஆலயத்தில் அதிகாலை 4 மணி முதல், காலை 10.30 மணி வரை, ஆயா்கள் (ஆலய தந்தை) பெஞ்சமின், காா்த்திகேயன் ஆகியோா் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்து, மெழுகுவா்த்தி ஏற்றி வழிபட்டனா்.
இதற்கான ஏற்பாடுகளை சபையின் செயலாளா் நேருதாஸ், பொருளாளா் ராஜன்ராஜ், பொறுப்பாளா் நிக்சன் ஆகியோா் செய்திருந்தனா். மேலும், நிா்வாகத்தின் சாா்பில், ஏழை குழந்தைகள் மற்றும் தொழுநோயாளிகளுக்கு இலவச சீருடை, கேக் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருத்தணி நகரம் மற்றும் தாலுகாவில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில், கிறிஸ்துமஸையொட்டி அதிகாலை முதல் மதியம் வரை கிறிஸ்தவா்கள் பிராா்த்தனை நடத்தியும், பாடல்கள் பாடி வழிபட்டனா். விழாவையொட்டி ஆலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

