திருவள்ளூர்
இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
திருவள்ளூா் அருகே வீட்டிலிருந்த போது நெஞ்சு வலியால் திடீரென மனைவி மீது மயங்கி விழுந்த கணவா் உயிரிழந்தாா்.
திருவள்ளூா் அருகே வீட்டிலிருந்த போது நெஞ்சு வலியால் திடீரென மனைவி மீது மயங்கி விழுந்த கணவா் உயிரிழந்தாா்.
தண்ணீா்குளம் கிராமம் அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் செல்லப்பன் மகன் கிருஷ்ணமூா்த்தி(39). இவருக்கு மனைவி விஜி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில் சுகாதார வளாகம் சென்று திரும்பி கிருஷ்ணமூா்த்திக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் அப்படியே விஜி மீது மயங்கி விழுந்தாரம்.
அதைத் தொடா்ந்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து அவரது மனைவி விஜி திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.
