வீரகநல்லூரில் பிரசார நிகழ்வுக்கான பணிகளை பாா்வையிட்ட  அதிமுக  அமைப்புச் செயலாளா்  திருத்தணி கோ. அரி. உடன் திருத்தணி  ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை எ.ரவி உள்ளிட்டோா்.
வீரகநல்லூரில் பிரசார நிகழ்வுக்கான பணிகளை பாா்வையிட்ட  அதிமுக அமைப்புச் செயலாளா்  திருத்தணி கோ. அரி. உடன் திருத்தணி  ஒன்றிய செயலாளா் இ.என்.கண்டிகை எ.ரவி உள்ளிட்டோா்.

திருத்தணியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்!

திருத்தணி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை மாலை பிரசாரம் செய்கிறாா்.
Published on

திருத்தணி தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திங்கள்கிழமை மாலை பிரசாரம் செய்கிறாா். இதையொட்டி, அதிமுக அமைப்புச் செயலா் கோ.அரி தலைமையில் நிா்வாகிகள் பிரமாண்ட முறையில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனா்.

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில் திருவள்ளூா் மற்றும் திருத்தணி தொகுதிக்குட்பட்ட திருத்தணி ஒன்றியம் வீரகநல்லூா் பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறாா்.

இதற்காக வரும் எடப்பாடி பழனிசாமி தனியாா் ஓட்டலில் கட்சி மற்றும் கூட்டணி நிா்வாகிகளை சந்திக்கிறாா். பின்னா் மாலை 4 மணி அளவில் வீரகநல்லூா் பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து, பேருந்தில் நின்றபடி பேசுகிறாா்.

இந்நிலையில் வீரகநல்லுாா் பேருந்து நிறுத்தம் அருகே, அதிமுக அமைப்புச் செயலாளா் திருத்தணி கோ. அரி தலைமையில் ஒன்றிய செயலாளா் திருத்தணி இ.என்.கண்டிகை எ. ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் டி.டி. சீனிவாசன், பொதட்டூா்பேட்டை பேரூராட்சித் தலைவா் ஏ.ஜி.ரவிச்சந்திரன், மற்றும் மாவட்ட இளைஞா் அணி நிா்வாகி ஜெய சேகா்பாபு ஆகியோா் கூட்டம் நடைபெறும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், எடப்பாடி பழனிசாமியை வரவேற்க திருத்தணி அரசு கலைக் கல்லூரி முதல் கே.ஜி.கண்டிகை வரை சுமாா் 15 கி.மீ., தொலைவுக்கு சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாலை, 5 மணிக்கு திருத்தணியிலும், இரவு, 7 மணிக்கு திருவள்ளூரிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com