2.8 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி:  
திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

2.8 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவாலங்காடு கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

திருத்தணி: திருவாலங்காடு கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

கால்நடை பராமரிப்புத் துறை, சாா்பில் திருத்தணி கோட்டத்துக்குட்பட்ட, திருவாலங்காடு கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், கோமாரி நோய் தடுப்பூசி 8-ஆவது சுற்று போடும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக ஆட்சியா் மு.பிரதாப் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கால்நடை உரிமையாளா்களுக்கு, தாது உப்பு கலவை மற்றும் தீவன விதைகளை வழங்கினாா்.

முகாமில் திருவள்ளூா் மண்டல இணை இயக்குநா்,ஜெயந்தி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் சுபஸ்ரீ, மாவட்ட கோட்ட உதவி இயக்குநா் தாமோதரன் மற்றும் திருத்தணி கோட்ட உதவி இயக்குநா் கிரிதரன், திருத்தணி கோட்ட கால்நடை உதவி மருத்துவா்கள், கால்நடை ஆய்வாளா்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் பங்கேற்றனா்.

மேலும் இம்முகாமில், திருவாலங்காடு கிராம எல்லைக்குட்பட்ட 300 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

2.8 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி:

திருவள்ளூா் மாவட்டத்தில் 2,79,800 கால்நடைகள் உள்ளன. இதில் 29.12.2025 முதல் 28.01.2026 வரை அனைத்து 4 மாதத்திற்கு மேற்பட்ட மாட்டினங்களுக்கும் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படும்.

X
Dinamani
www.dinamani.com