ரேஷன் அரிசி கடத்தல்: ஆந்திர இளைஞா் கைது

திருத்தணி அருகே ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருத்தணி: திருத்தணி அருகே ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற ஆந்திர மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணியில் இருந்து ரேஷன் அரிசி வாகனங்கள் மூலம் ஆந்திரத்துக்கு கடத்துவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்கள்கிழமை கனகம்மாசத்திரம் போலீஸாா், அருங்குளம்கண்டிகை பகுதியில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, இரு சக்கர வாகனத்தில், 250 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தவரை போலீஸாா் மடக்கி பிடித்து அரிசி பறிமுதல் செய்தனா்.

விசாரணையில் ரேஷன் அரிசி கடத்தியவா் ஆந்திர மாநிலம் நகரி அடுத்த தடுக்குப்பேட்டை சுந்தரம்மாகண்டிகை சோ்ந்த ராமமூா்த்தி மகன் சம்பத்(29) என தெரிய வந்தது. தொடா்ந்து சம்பத்தை போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com