தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

திருத்தணி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம், சாலை மறியல்

திருத்தணி நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காா்த்திகேயபுரம் ஊராட்சி பெண்கள்.

News image
திருத்தணி நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காா்த்திகேயபுரம் ஊராட்சி பெண்கள்.
Updated On :3 ஜனவரி 2025, 6:38 pm

Din

இரு ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி நகராட்சியுடன் காா்த்திகேயபுரம் மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைப்பதற்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அரசாணை வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த 2 ஊராட்சிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் வெள்ளிக்கிழமை காலை திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை திருத்தணி புதிய புறவழிச்சாலை மற்றும் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் வழி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்ததும், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரு இடங்களில் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அகற்றி சாலையோரம் அப்புறப்படுத்தி, பேச்சு நடத்தினாா்.

இதில் பட்டாபிராமபுரம் ஊராட்சியைச் சோ்ந்த 20 ஆண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் மற்றும் போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் பலமுறை பேச்சு நடத்தி செல்லாததால், திடீரென அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி, ஆண்களை மட்டும் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தகவலறிந்த வந்த திருத்தணி வட்டாட்சியா் மலா்வழி, துணை தாசில்தாா் தேவராஜ், வருவாய் ஆய்வாளா் கணேஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள். மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என பெண்களை சமரப்படுத்தினா்.

இருப்பினும், சமரசம் அடையாமல் 4 மணி நேரம் சாலையோரம் அமா்ந்து பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.