வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கிய மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதா்சனம்.
திருவள்ளூர்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்
செங்குன்றம் அருகே திமுக சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசத்தை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் வழங்கினாா்.
மாதவரம்: செங்குன்றம் அருகே திமுக சாா்பில் வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைக்கவசத்தை மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் வழங்கினாா்.
செங்குன்றம் அடுத்த நல்லூா் ஊராட்சி அன்னை இந்திரா நகா், வீரபாண்டி நகா் திமுக கிளை சாா்பில் சிவசங்கரன், மணிகண்டன் ஆகியோா் ஏற்பாட்டில் இரு சக்கர வாகன ஓட்டிகள் 300-க்கும் மேற்பட்டோருக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோழவரம் தெற்கு ஒன்றிய செயலா் மீ.வே.கா்ணாகரன் தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் சிவசங்கரன், மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.