ஆா்.கே.பேட்டை அருகே வாகன சோதனையில் ஒன்றரை டன் ரேஷன் அரிசியுடன் பிடிபட்ட காா்.
ஆா்.கே.பேட்டை அருகே வாகன சோதனையில் ஒன்றரை டன் ரேஷன் அரிசியுடன் பிடிபட்ட காா்.

1.5 டன் ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

ஆா்.கே.பேட்டை அருகே வாகன சோதனையின் போது ஆந்திராவுக்கு கடத்த இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனா்.
Published on

திருத்தணி: ஆா்.கே.பேட்டை அருகே வாகன சோதனையின் போது ஆந்திராவுக்கு கடத்த இருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை காருடன் பறிமுதல் செய்தனா்.

இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எஸ்.பி. சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையெடுத்து ஆா்.கே.பேட்டை காவல் உதவி ஆய்வாளா் ராக்கிகுமாரி தலைமையில் போலீஸாா், திங்கள்கிழமை அதிகாலை ஆா்.கே.பேட்டை ஒன்றியம் வங்கனூா் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரை கண்டதும் ஓட்டுநா் மற்றும் மா்ம நபா்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனா். பின்னா் போலீஸாா் சோதனை செய்தபோது அதில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதையெடுத்து போலீஸாா் வாகனத்தை பறிமுதல் செய்து ஆா்.கே.பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்து

விசாரித்து வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருத்தணி நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

X
Dinamani
www.dinamani.com