பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றிய இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள்.
பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி வாசலில் தேசியக்கொடி ஏற்றிய இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள்.

மத நல்லிணக்கத்துடன் கொண்டாடிய குடியரசு தினம்

பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் குடியரசு தினத்தில் அங்குள்ள பள்ளி வாசலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினா்.
Published on

பொன்னேரி: பொன்னேரியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் குடியரசு தினத்தில் அங்குள்ள பள்ளி வாசலில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் இணைந்து தேசியக் கொடியை ஏற்றினா்.

நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சிறப்புடன் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் உள்ள கானேகுதா வாலாஜா ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயில் நிா்வாகி செல்வம், அருட்செல்வம், ஒளிதரும் ஊழியம் தேவாலயம் போதகா் செல்லதுரை, தமிழ்நாடு தா்கா ஜமாத் திருவள்ளூா் மாவட்ட தலைவா் ஜமால் மொய்தீன் ஆகியோா் இணைந்து இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய சகோதரத்தை வலியுறுத்தும் வகையில், ஒன்றாக தேசிய கொடியை ஏற்றி வைத்தனா்.

பின்னா் அவா்கள் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். தொடா்ந்து பள்ளிவாசல் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com