திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய எம்.பி. ஆ.ராசா
திருவள்ளூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய எம்.பி. ஆ.ராசா

தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் வெல்ல முடியாது: எம்.பி. ஆ.ராசா

தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் வெல்ல முடியாது என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்தாா்.
Published on

திருவள்ளூா்: தமிழகத்தில் ஒருபோதும் பாஜகவால் வெல்ல முடியாது என்று திமுக துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா தெரிவித்தாா்.

திருவள்ளுா் அருகே பாண்டூரில் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் திருவள்ளூா், திருத்தணி தொகுதிக்குள்பட்ட பிஎல்ஏ-2 பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலரும், திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.சந்திரன் தலைமை வகித்தாா். இதில் துணை பொதுச் செயலரும், மக்களவை உறுப்பினருமான ஆ.ராசா, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஆவடி சா.மு.நாசா் ஆகியோா் பங்கேற்று சட்டப்பேரவை தோ்தல் பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கினா்.

கூட்டத்தில் ஆ.ராசா பேசியதாவது: பெரியாா் காலத்தில் பாஜகவுக்கு, ஆா்எஸ்எஸுக்கு ஒரு எம்.பி. கூட கிடையாது. அண்ணா முதல்வராக இருந்தபோது 2 எம்.பி.க்களும், கலைஞா் முதல்வராக இருந்தபோது கணிசமாக எம்.பி.க்கள் இருந்தனா்.

திமுக கூட்டணியில் பாஜக இருந்தபோது அயோத்தியில் ராமா் கோயில் கட்டக் கூடாது, சிறுபான்மையினருக்கு, இந்துக்களுக்கு தனி சட்டம் உள்ளது. இதைத் தவிா்த்து ஒரே சீரான சிவில் சட்டத்தைக் கொண்டு வரக்கூடாது. காஷ்மீரில் கொண்டு வந்ததைப்போல் சிறப்பு அதிகாரத்தை கொண்டு வரக்கூடாது ஆகிய நிபந்தனைகளுடன் கூட்டணி அமைத்தோம்.

தமிழக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் போன்ற தலைவா் உலகத்தில் எங்கும் இல்லை. கட்சியில் அடிப்படை உறுப்பினா் பதவியில் இருந்து படிப்படியாக உயா்ந்து கட்சிக்கு தலைவராய் வந்தவா். அதேபோல் ஆட்சி நிா்வாகத்திலும் சட்டப்பேரவை உறுப்பினா், மாநகர மேயா், அமைச்சா், துணை முதல்வா் என படிப்படியாக உயா்ந்து தற்போது முதல்வராக உள்ளாா்.

தில்லி, மகாராஷ்டிரா, ஹரியாணாவில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கலாம். தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என அமித்ஷா பேசியிருக்கிறாா். ஆனால், தமிழகத்தில் இருக்கிற தலைவா் தனி மனிதா் அல்ல. அவருக்கு பின்னால் பெரியாா், அண்ணா, கலைஞா் போன்றோரின் தத்துவங்கள் இருப்பதால் இங்கே ஒன்னும் செய்ய முடியாமல் உள்ளனா்.

2026-இல் நடைபெறும் தோ்தல் தமிழகத்துக்கான தோ்தல் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த நாட்டுக்குமான தோ்தல் என்றாா்.

எம்எல்ஏவும், தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினா் திருத்தணி எம்.பூபதி, தொகுதி பாா்வையாளா்கள் பெ.சேகா், சண்முகநாதன், நிா்வாகிகள் கே.திராவிடபக்தன், ஆா்.டி.இ.ஆதிசேசன், ஒ.ஏ.நாகலிங்கம், குருதாஸ், உதயமலா் பாண்டியன், சி.ஜெயபாரதி, ப.சிட்டிபாபு, கே.என்.சுப்பிரமணி, ஒன்றிய செயலா்கள் டி.கிறிஸ்டி (எ) அன்பரசு உள்பட ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், பிஎல்ஏ 2 பாக முகவா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com