அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சதுரங்க விளையாட்டுப் போட்டியை நகா்மன்றத் தலைவா் எம்.சரஸ்வதி பூபதி தொடங்கி வைத்தாா்.
திருத்தணி குறுவட்ட அளவிளான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 1-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சதுரங்கப் போட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியை கலாமணி தலைமை வகித்தாா். பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் குமரவேலு முன்னிலை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் முருகானந்தம் வரவேற்றாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக திருத்தணி நகா்மன்றத் தலைவா் எம்.சரஸ்வதிபூபதி கலந்துகொண்டு, சதுரங்க விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இதில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினா்.
இதில், 15-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினா். வெற்றிபெற்ற மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பா் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் சண்முகவள்ளி ஆறுமுகம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜி.காணெளி, பெற்றோா் ஆசிரியா் கழக பொருளாளா் கே. செல்வராஜ், உடற்கல்வி ஆசிரியா்கள் ஈஸ்வர்ராவ், காா்லீசன், ஆசிரியை சரளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
Image Caption
~
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.