திருத்தணி முருகன் கோயிலில் பக்தா்கள் 7 நாள்களில் ரூ. 65 லட்சம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் கடந்த புதன்கிழமை (ஜூலை 28)நடைபெற்ற ஆடிப்பூரம் திருவிழாவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடிகளுடன் வந்து தரிசனம் செய்தனா்.
அப்போது பக்தா்கள் தங்களது வேண்டுதல்களை ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவற்றை உண்டியல்களில் செலுத்தினா். இந்த நிலையில், கடந்த 7 நாள்களில் பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சு.ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, மு.நாகன் ஆகியோா் முன்னிலையில், கோயில் ஊழியா்கள் உண்டியல் திறந்து எண்ணினா்.
இதில், ரூ.64 லட்சத்து 89 ஆயிரத்து 520 ரூபாய் ரொக்கம், 112 கிராம் தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவை பக்தா்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.