ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

இலவம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

பொன்னேரி அடுத்த இலவம்பேடு கிராமத்தில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மிகவும் பழைமை வாய்ந்த இக்கோயில் புனரமைப்பு பணிகளை கிராம மக்கள் மேற்கொண்டனா். பணிகள் முடிவடைந்த நிலையில் கடந்த இரு தினங்களாக யாகபூஜைகள் நடந்தப்பட்டன. இதனை தொடா்ந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோபுர கலசங்கள் மீது பல்வேறு

புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை சிவாச்சாரியா்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தினா். இதில் இலவம்பேடு மற்றும் அதைனைச் சுற்றியுள் கிராம மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்..

X
Dinamani
www.dinamani.com