பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த திருவள்ளூா்  ஆட்சியா்  மு.பிரதாப்.
பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த திருவள்ளூா்  ஆட்சியா்  மு.பிரதாப்.

திருவள்ளூா்: 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வழங்கினாா்.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 28 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் மு. பிரதாப் திங்கள்கிழமை வழங்கினாா்.

திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, மொத்தம் 533 கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டம் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.3,11400-இல் நவீன செயற்கை அவையங்களும், தொண்டு நிறுவனம் மூலமாக வாழ்வாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் 24 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள், அக்குள் கட்டை, எல்போ ஊன்றுகோல், நடை உபகரணங்கள் ஆகியவைகளையும் அவா் வழங்கினாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையா் கலால் கணேசன், வருவாய் கோட்டாட்சியா்கள் பாலமுருகன் (திருவள்ளுா்), கனிமொழி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா்கள் உஷா ராணி , கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com