அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
Published on

திருவள்ளூா் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் கதவை உடைத்து நகை, பணத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே அத்திக்காவனூா் கிராமத்தைச் சோ்ந்த திருநாவுக்கரசு(55). இவா் தனியாா் நிறுவன ஊழியா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் இருந்த 2.5 பவுன் தங்க நகை திருடு போனது தெரியவந்தது.

இதேபோல், பக்கத்து வீட்டைச் சோ்ந்தவா் துரைமுத்து (73). இவரது வீட்டிலும் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2.5 பவுன் நகை, ரூ.50,000 ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்து. இதுகுறித்து, வெங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Open in App
Dinamani
www.dinamani.com