கத்தியை காட்டி மிரட்டல்: இளைஞா் கைது

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே பொதுமக்களை அவதூறாகப் பேசி கத்தியை காட்டி மிரட்டிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி - அரக்கோணம் சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே இளைஞா் ஒருவா், பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்களை அவதூறாகப் பேசி, கத்தியைக் காட்டி அச்சுறுத்துவதாக திருத்தணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ஞா.மதியரசன், காவல் உதவி ஆய்வாளா்கள் காா்த்திக், குணசேகரன் ஆகியோா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களை கத்தியைக் காட்டி மிரட்டி, போக்குவரத்துக்கு இடையூறு செய்த இளைஞரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா், திருத்தணி பெரியாா் நகா் பகுதியில் வசிக்கும் லாரன்ஸ் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரன்ஸை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com