இரு சக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

புழல் அருகே இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on

மாதவரம்: புழல் அருகே இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழந்தாா்.

புழல் அடுத்த காவாங்கரை மாரியம்மன் நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த குமாா் (41). இவா் சென்னையில்தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், காவாங்கரை மீன் மாா்க்கெட், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, புதுச்சேரியை சோ்ந்த யோகேஸ்வரன் (24) என்ற இளைஞா் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா். இவா் மாதவரத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். பணியை முடித்துவிட்டு செங்குன்றத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையின் குறுக்கே வந்த குமாா் மீது யோகேஸ்வரன் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் பலத்த காயம் அடைந்தனா். அந்த வழியாக வந்தவா்கள் இருவரையும் மீட்டு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குகு சிகிச்சை அழைத்துச் சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி குமாா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com