பாலியல் வன்கொடுமை குற்றங்களை கண்டித்து தவெக ஆா்ப்பாட்டம்
திருவள்ளூா்: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து கருப்பு சட்டை அணிந்து தவெகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மகளிா் அணி தலைவி தனலட்சுமி தலைமை வகித்தாா். அப்போது, தமிழகத்தில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோருக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருகிறது.
இதைத் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து தமிழக வெற்றி கழக மகளிரணியினா் முழக்கம் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், தண்டனைகளை அதிகப்படுத்தி, மகளிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கைகளில் பதாகைகளை ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.