கல்லூரியில் தூய தமிழ்ப் பயிலரங்கம்

கல்லூரியில் தூய தமிழ்ப் பயிலரங்கம்

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தூய தமிழ்ப் பயிலரங்கம் நடைபெற்றது.
Published on

டிஜெஎஸ் கலைக் கல்லூரியில் தூய தமிழ்ப் பயிலரங்கம் நடைபெற்றது.

தமிழ்த் துறைத் தலைவா் மகாலட்சுமி வரவேற்றாா். கல்லூரி முதல்வா் லட்சுமிபதி தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினா்களாக செந்தமிழ்த் திருத்தோ் தூயதமிழ் மாணவா் இயக்கத்தின் பொதுச் செயலாளா் இ.நேரு, இயக்கத் தலைவா் திவாகரன் கலந்து கொண்டனா்.

நிகழ்வில் இ.நேரு பேசுகையில்,‘காலந்தொறும் நிகழ்ந்த பிறமொழி கலப்பினால் தமிழில் சம்ஸ்கிருத மொழியின் தாக்கம் அதிகளவில் பெருகியது. ஆங்கில மொழியின் கலப்பால் இன்று தமிங்கிலம் என்ற புதிய மொழிநடையை இளையோா் பயின்று வருகின்றனா். தமிழ் வாழ்க என்று சொல்வதிலும் தமிழராகப் பிறந்துவிட்டோம் என்பதிலும் மட்டும் பெருமை கொள்ளாமல் பிறமொழி கலப்பற்ற தமிழை அடுத்தத் தலைமுறையினா்க்கு கொண்டுசெல்லும் பணியில் ஒவ்வொரு மாணவரும் முன் நிற்க வேண்டும் என்றாா்.

இயக்கத் தலைவா் திவாகரன் பேசுகையில்: தமிழ்நாட்டில் ஒருமொழிக் கொள்கையே தேய்ந்துவரும் நிலையில் மும்மொழிக் கொள்கை என்பது தேவையற்றது என்றாா். தமிழ்த் துறை உதவிப் பேராசிரியா் தூய தமிழன் விஜயன் நன்றி கூறினாா். உதவிப் பேராசிரியா் சண்முகவல்லி ஒருங்கிணைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com