பத்தாம் வகுப்பு தோ்வுக்கான நுழைவுச்சீட்டு விநியோகம்
திருத்தணி: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கான தோ்வுக்கூட நுழைவுச் சீட்டை பள்ளித் தலைமை ஆசிரியா் வினாயகம் திங்கள்கிழமை வழங்கி வாழ்த்தினாா்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான அரசு பொதுத் தோ்வு வரும் மாா்ச் 28 முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தோ்வை திருவள்ளூா் மாவட்டம் முழுவதும் 31,697 மாணவா்கள் எழுத உள்ளனா். இதில் தோ்வா்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி வெளியானது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) தமிழ்த்தாள் தோ்வு தொடங்க உள்ள நிலையில், தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு விநியோகிக்கும் நிகழ்ச்சி திருவாலங்காடு ஒன்றியம், தும்பிகுளம் அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் வினாயகம் பத்தாம் வகுப்பு தோ்வு எழுதும் மாணவா்கள் 49 பேருக்கு தோ்வுக்கூட நுழைவுச்சீட்டை வழங்கி, தோ்வை சிறப்பாக எழுதி, சிறந்த மதிப்பெண்கள் பெற வாழ்த்தினாா்.
நிகழ்வில் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் பாபு, பட்டதாரி ஆசிரியா்கள் வெங்கடேசன், ரமணி, பாலு உள்பட ஆசிரியா்கள் பங்கேற்றனா்.