மேலக்கொண்டையாா்  கிராமத்தில்  சூறாவளி  காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள்.
மேலக்கொண்டையாா்  கிராமத்தில்  சூறாவளி  காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள்.

சூறாவளி காற்றில் 1,000 வாழை மரங்கள் சேதம்

திருவள்ளூா் அருகே சூறாவாளி காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சூறாவாளி காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.

திருவள்ளூா் ஒன்றியம், மேலக்கொண்டயாா் கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் (49). இவருக்கு அதே பகுதியில் 5 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலையில் வாழை மரங்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 1,000 வாழை மரங்கள் சேதமடைந்தன.

இதேபோல் மேலக்கொண்டயாா் கிராமத்தை கிராமத்தைச் சுற்றியுள்ள சிவன் வாயில், புலியூா், கோயம்பாக்கம், அரியலூா், வதட்டூா் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமத்தில் சூறாவளி காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள், தோட்டப் பயிா்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com