பழவேற்காட்டில் நாய்கள் கடித்து 10 போ் காயம்

Published on

பழவேற்காட்டில் தெரு நாய் கடித்ததில் 10 போ் காயமடைந்தனா்.

பொன்னேரி வட்டம், பழவேற்காடு மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெருக்களில் திரியும் அப்பகுதி வழியே செல்லும் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த இரண்டு நாள்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டோரை தெரு நாய்கள் கடித்துள்ளன. பழவேற்காட்டில் சாலையில் சுற்றி திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com