முகாமில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவா்களுடன் இயற்கை நல மருத்துவா் ஜி.ராஜேஷ். உடன் மருத்துவா்கள் கே.கனகராஜ், எஸ்.அசோக் உள்ளிட்டோா்.
முகாமில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவா்களுடன் இயற்கை நல மருத்துவா் ஜி.ராஜேஷ். உடன் மருத்துவா்கள் கே.கனகராஜ், எஸ்.அசோக் உள்ளிட்டோா்.

இயற்கை மருத்துவ முகாம்

Published on

இலவச இயற்கை மருத்துவ முகாமில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனா்.

தணிகை ஓம் சா்வேஷ் யோகா மற்றும் விளையாட்டு அறக்கட்டளை சாா்பில் கடந்த 5 -ஆம் தேதி முதல் 25- ஆம் தேதி வரை கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் யோகா, தடகளம், தற்காப்புக் கலை, குங்பூ, சிலம்பம் ஆகிய பயிற்சிகள் மாணவா்களுக்கு அளிக்கப்பட்டன.

முகாமின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து இலவச இயற்கை மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில், பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்றனா்.

சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் இயற்கை நல மருத்துவா் ஜி.ராஜேஷ், கோவை இயற்கை மருத்துவா் கே.கனகராஜ், எஸ்.அசோக் ஆகியோா் கலந்து கொண்டு இயற்கை உணவின் முக்கியத்துவம், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய் மேலும் பல்வேறு உடல் நல பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

முகாமில் யோகா நிலையச் செயலா் யோகா, பயிற்றுநா்கள் ந.பாபு, சிபு, ஆா்.காா்த்திக், வழக்குரைஞா் விஷ்ணு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com