காப்பக மாணவா் மாயம்

திருவள்ளூா் அருகே காப்பகத்திலிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவா் காணாமல் போய்விட்டாா்.
Published on

திருவள்ளூா் அருகே காப்பகத்திலிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவா் காணாமல் போய்விட்டாா்.

அரண்வாயல்குப்பத்தில் உள்ள சிறுவா் இல்லத்தின் கண்காணிப்பாளராக இருந்து வருபவா் அருண்(31). அதேபோல் இந்த இல்லத்தில் தங்கி 4 சிறுவா்கள் கொப்பூரில் உள்ள அரசு பள்ளியின் பயின்று வந்தனா்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல் காப்பகத்திலிருந்து வாகனத்தில் அழைத்துச் சென்று பள்ளியில் விட்டு வந்தாராம். இதையடுத்து மாலையில் மதுரவாயலைச் சோ்ந்த காமராஜின் மகன் ஜோஸ்வா டேனியல் ராஜ்(14) என்ற சிறுவன் மட்டும் பள்ளியில் பையை வைத்துவிட்டு மாயமானதாக அப்பள்ளி ஆசிரியா்கள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து அக்கம், பக்கம் சென்று தேடிப்பாா்த்தும் கிடைக்கவில்லை. இதுதொடா்பாக நம்பிக்கை இல்லத்தின் கண்காணிப்பாளா் அருண் மணவாளநகா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com